இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு கிலோ தக்காளி ரூ.130..!
கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, தக்காளி ஒருகிலோ ரூ.110 முதல், ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.