இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு, டோர் டெலிவரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு, டோர் டெலிவரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…