வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளிப்பு.! புழல் காவல் ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்.!

Default Image

வீட்டு வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளித்த விவகாரம். புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்யபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை கொடுத்து வசித்து வந்துள்ளார். பெயிண்டராக வேலைபார்த்துவந்த சீனிவாசனுக்கு கொரோனா ஊரடங்கினால் சரிவர வேலை இல்லாததால், வாடகை கொடுக்க முடியவில்லை.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாம் சீனிவாசனை விசாரித்துள்ளார். அப்போது சீனிவாசனை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்க முடியாத சீனிவாசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனை அடுத்து உடலில் 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இறப்பதற்கு முன்னர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்