அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.
இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…