வீட்டு விநாயகர் சிலை – அறநிலையத்துறை கரைக்க உத்தரவு
வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு, கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.எனவே தமிழகத்தில் பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவோ மற்றும் சிலையை கரைக்கவும் அரசு தடை விதித்தது. பின் வீடுகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு. சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சிலைகளை கரைக்க அறநிலைய துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு முறையீடு செய்தது. வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு, கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை நீர் நிலைகளில் கரைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.