ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் உள்ள கழுவுநீர் தொட்டியில் இருந்து வாயு வெளியாகியுள்ளது.
இந்த நச்சு வாயுவை மாணவர்கள் சுவாசித்த காரணத்தால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது . இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீரென பரவிய வாயு எவ்வாறு வெளியானது என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…