மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை
மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை, டயாலிசிஸ், நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்க தவறும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.