வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடியில் இருந்து அவரது காரில் சொந்த ஊருக்கு திரும்பச் சென்றுகொண்டிருந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம், இறைஞ்சி என்ற பகுதியில் கார் சென்ற போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து அவரது காரின் மீது மோதியது. பின்னர் கார் சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த ஐசக் காரை நிறுத்திவிட்டு அரசுப் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் வெளியே இறங்கி வந்து வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், அதிகாலை வேளையில் அந்த வழியாக திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியதில், கல்வி நிறுவன அதிபர் ஐசக் மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்குணம் ஆகிய 3 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…