பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூர தாய்!கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்!

Default Image
  • பெற்ற குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி கொன்ற கொடூர தாய்.கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்.
  • பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்தை சேர்ந்தவர் விநாயகம் ஆவார்.இவரது மனைவி மீனாட்சி ஆவார்.இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளது.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் விநாயகத்தை பிரிந்து மீனாட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்பகுதியில் கட்டிட பணியாளர் தொழில் செய்து வந்துள்ளார்.அப்போது கட்டிட மேற்பார்வையாளருக்கும் மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மீனாட்சி கற்பமாகியதன் காரணமாக கட்டிட தொழில் மேற்பார்வையாளர் அவரை கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மீனாட்சி கோவிலுக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீனாட்சி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பின்னர் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மீனாட்சி நோயுடன் இருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எண்ணி பச்சிளம் குழந்தை என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.இதன் காரணமாக விழுப்புரம் உள்ள கோலியனூரான் கழிவு நீர் கால்வாயில் குழந்தையை வீசியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைத்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் மீனாட்சியும் அந்த கழிவுநீர் கால்வாயில் குதித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர்.

பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் குற்றவாளி மீனாட்சியை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்