ஆடி மாத முதல் நாளில் கோர விபத்து : சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி !
தஞ்சாவூர் : புதுக்கோட்டையில் உள்ள கந்தர்வ கோட்டை கண்ணுகுடிபட்டியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வளம்பக்குடி பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகிருக்கிறது. இந்த கோர விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேர் உடல் நசுங்கிசம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக செங்கிப்பட்டி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கோர விபத்து தொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.