சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தையை நேரில் சென்று கெளரவித்த அமைச்சர் பொன்முடி.!

Minister ponmudi

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

இந்த சந்திராயன்-3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக செயல்பட்ட வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர். சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை  இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு தெரிவித்தார்.

தற்போது, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , வீரமுத்துவேல் அவர்களின் சொந்த ஊரான விழுப்புரம் சென்று , அவரது தந்தை SRMU பழனிவேல் அவர்களை நேரில் சந்தித்து , சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தனது மரியாதையை செலுத்தினார். உடன் அமைச்சர் பொன்முடி அவர்களின் மனைவி மற்றும் திமுக கட்சியினர் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்