அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மரியாதை..!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி சென்று மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செவ்வந்தி இல்லத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 54-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.