கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் கொண்டாப்பட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான முகுர்த்தகால் நாட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 22ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 72 கல்யாணம் 72 சீர்வரிசையுடன் நடைபெறுகிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு 11 புதிய மருத்துவக்கல்லூரி பெற்று தந்து சரித்திர சாதனை படைத்துள்ளார் என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோடை வெயில் வருவதையொட்டி தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு,கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் 142 ஆண்டுகள் இல்லாத வறட்சி வந்தபோது கூட சமாளித்தோம் என குறிப்பிட்டார்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…