சரித்திர சாதனை படைத்த முதல்வர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!

கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் கொண்டாப்பட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான முகுர்த்தகால் நாட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 22ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 72 கல்யாணம் 72 சீர்வரிசையுடன் நடைபெறுகிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு 11 புதிய மருத்துவக்கல்லூரி பெற்று தந்து சரித்திர சாதனை படைத்துள்ளார் என பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோடை வெயில் வருவதையொட்டி தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு,கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் 142 ஆண்டுகள் இல்லாத வறட்சி வந்தபோது கூட சமாளித்தோம் என குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025