கொரோனவால் இறந்தவருக்கு உரிய மரியாதையை வழங்குக – முதல்வர் பழனிசாமி
மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி, அடக்கம் செய்யவிடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அடக்கம் செய்ய வந்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவது பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தமிழக முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது.
மேலும் நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என முதல்வர் பதிவிட்டுள்ளார். இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 21, 2020