Hong Fu நிறுவனம் தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீடு..! 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..!

Default Image

முதல்வர் முன்னிலையில், தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், படிப்படியாக 1000 கோடி ரூபாய் வரை முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்தொழில் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த முதலீடு தமிழ்நாட்டில் காலணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். ஹாங் ஃபூ தொழில் குழுமம் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம், விளையாட்டு காலணிகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயல்பாடுகளை 2003-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம், உலக அளவில் விளையாட்டு காலணிகள் முன்னணி விற்பனையாளர்களான நைக் (Nike), பூமா (Puma), கான்வர்ஸ் (Converse), வேன்ஸ் (Vans) போன்ற பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு காலணிகளை தயாரித்து வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, விரைவில் தொழிற்சாலை தொடங்கும் பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்