திண்டுக்கல்லில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே நாளில் ஒருவர் கொலை, ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் அதிகரித்துவிட்டனர். அதே போல தான் காரணமில்லாத மரணங்களும், தற்கொலைகளும் நிகழ்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் 19 வயதுடைய ஸ்ரீகாந்த் மற்றும் 33 வயதுடைய ராமச்சந்திரன். இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கணவன் மனைவி வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த ஸ்ரீகாந்த் இரு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதே ஊரில் கூலி தொழில் செய்யக்கூடிய ஸ்ரீகாந்தின் துணை ராமச்சந்திரன் அதே நாளில் மாமரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கண்டறிந்த போலீசார் ஒரே நாளில் இருவரும் கொலை மற்றும் தற்கொலை செய்திருப்பது குறித்து சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…