ஹோமியோபதி பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு..!

Published by
murugan

ஹோமியோபதி பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஓயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி (ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான AAIPGET-2021-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

1. அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

2 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்

விண்ணப்பப்படிவம் குற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சென்னை- 106 அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி இயக்குநரகத்திலோ தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளிலிருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது

*விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய தொடக்க நாள்: 28.12.2021 காலை 10.00 மணி

*விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்:18.01.2022 பிற்பகல் 05.00 மணி வரை

* புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் 18.01.2022 பிற்பகல் 05.30 மணி வரை

விண்ணப்ப கட்டணம் தகுதி மேற்கண்ட படிப்புகளுக்கான சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் www.tnhealin.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் கிடைக்கபெறும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய தகவல் தொகுப்பேட்டினை படித்து அதில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தினை புஈர்த்தி செய்து உடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106 என்ற முகவரியில் 18.01.2022 பிற்பகல் 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்கவேண்டும்.

தாமதமாக கடைசி தோளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது. கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் / ஆணைகளின்படி பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

2 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

2 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

3 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

5 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

5 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

6 hours ago