கொரோனா தொற்றுக்கு ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோஹாமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டறிவதில் ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன்படி, அந்த மருந்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிறில் சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்னர் இதே முறையில் மீண்டும் மருந்து சாப்பிட வேண்டும் என தெரிவித்தது. கேரளா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்று பின்பற்றி வருவதாகவும், தமிழகமும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. அதனை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…