மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தை சீரமைப்போம் என்ற கொள்கையில் 7அம்ச திட்டங்கள் உள்ளது என்று கூறியுள்ளார். 7 அம்ச திட்ட விவரங்களை காண்போம்.
உலகத் நாம் வாய்த்த ஒரு அரச நிர்வாகத்தினை தமிழகமும் தமிழக மக்களும் பெற்றிடும் வகையில் முதல் திட்டமாக,கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலங்கள் என்கின்ற எங்களின் முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
இணையத் தொடர்பு என்பது மக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணையவசதி செய்து கொடுக்கப்படும்.
கிராமப்புரங்களில் இருக்கும் மனித வள ஆற்றலை சரியாகப் பயன்படுத்தும் வகையில் ,தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் நகர்ப்புரங்களுக்கு இணையாக கிராமப்புரங்களிலும் தங்கள் கிளை அலுவலகங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியுறுத்தும்.
பாரதியாரின் புதுமைப் பெண் என்கின்ற கனவு மெய்ப்பட இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்.
விவசாயத் தொழில் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் அது உண்மையிலே வருமானமும் ,லாபமும் உள்ள ஒரு நேர்மையான வணிகமாக மாற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் எங்கள் அரசால் செய்து தரப்படும்.
மாறிவரும் சூழலியலுக்கு ஏற்ற வகையில் குழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள் அரசின் முழு முதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும். அதற்கான அனைத்து வழி முறைகளும் ஆராயப்பட்டு சாத்தியமானவைகள் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
வறுமைக்கோடு என்கின்ற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக்கோடு என்கின்ற புதிய அளவீடு அமையப் பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை செழுமைக்கோட்டிற்கு கொண்டு வரும் முதல் அரசாக எங்கள் அரசு செயல்படும்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…