ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் – 7 அம்ச திட்டங்களை அறிவித்த கமல்ஹாசன்

Default Image

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தை சீரமைப்போம் என்ற கொள்கையில் 7அம்ச  திட்டங்கள் உள்ளது என்று கூறியுள்ளார். 7 அம்ச திட்ட விவரங்களை காண்போம்.

நேர்மையான துரித நிர்வாகம் : 

உலகத் நாம் வாய்த்த ஒரு அரச நிர்வாகத்தினை தமிழகமும் தமிழக மக்களும் பெற்றிடும்  வகையில் முதல் திட்டமாக,கிராம பஞ்சாயத்து  அலுவலகங்கள் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலங்கள் என்கின்ற எங்களின் முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.

தமிழகத்தில் உள்ள அத்தனை இல்லங்களும் மின்ணணுவாக மாற்றும் திட்டம் :

இணையத் தொடர்பு என்பது மக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணையவசதி செய்து கொடுக்கப்படும்.

நவீன தற்சார்பு கிராமங்கள் :

கிராமப்புரங்களில் இருக்கும் மனித வள ஆற்றலை சரியாகப் பயன்படுத்தும் வகையில் ,தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் நகர்ப்புரங்களுக்கு இணையாக கிராமப்புரங்களிலும் தங்கள் கிளை அலுவலகங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியுறுத்தும்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும் : 

பாரதியாரின் புதுமைப் பெண் என்கின்ற கனவு மெய்ப்பட இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்.

பசுமை புரட்சி பிளஸ் :

விவசாயத் தொழில் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் அது உண்மையிலே வருமானமும் ,லாபமும் உள்ள ஒரு நேர்மையான வணிகமாக மாற்றுவதற்கான  அனைத்து முன்னெடுப்புகளும் எங்கள் அரசால் செய்து தரப்படும்.

சூழலியல் சுகாதாரம் :

மாறிவரும் சூழலியலுக்கு ஏற்ற வகையில் குழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள்  அரசின் முழு முதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும். அதற்கான அனைத்து வழி முறைகளும் ஆராயப்பட்டு சாத்தியமானவைகள் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

 செழுமைக் கோடு :

வறுமைக்கோடு என்கின்ற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக்கோடு என்கின்ற புதிய அளவீடு அமையப் பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை செழுமைக்கோட்டிற்கு கொண்டு வரும் முதல் அரசாக எங்கள் அரசு செயல்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்