மதுரையில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்…!
மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிற நிலையில், 4 செவிலியர்கள் கொண்ட 5 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இத்திட்டமானது, முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த இயலாதவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் 1,000 பெரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.