இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் எனவும், அந்த டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து இலவச பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025