தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.! உள்துறை செயலாளர் உத்தரவு.!
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழக காவல்துறையின் உளவுத்துறைக்கு மட்டும் கூடுதல் டிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையராக பணியில் இருந்த ஏ.அருண் ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணி மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த கேசங்கர் ஐபிஎஸ் ஆவடி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அடுத்ததாக உளவுத்துறை ஐஜி-ஆக இருந்த செந்தில் வேலன் உளவுத்துறை கூடுதல் டிஜிபி-யாக கூடுதல் பொறுப்பையும் கவனிக்க உள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தலைமை டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அந்த பதவிக்கு யார் வருவார் எனவும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.