திருச்சி:இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த 8 குழுக்களில்,சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில்,தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், சர்மிளா சங்கர் என்பவரது தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி-சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிகொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் வீடியோ காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து,கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால்,இல்லம் தேடி கல்வி பிரச்சார குழுவிலிருந்து சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பணிக் குழுவை நீக்கம் செய்து திருச்சி ஒருங்கிணைந்த பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…