கோவை மாவட்டதில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 17 பேர் உயிரிழந்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி உள்ள மீதமுள்ள சுற்று சுவர்களை இன்று இடிக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி கூறியிருந்தார். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் , உறவினர்களும் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை கைது செய்யவேண்டும் அதுவரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது போலீசாருக்கும் ,போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்திய பிறகு இறந்தவர்களின் உடலை உறவினர்கள் வாங்கி ஒரே இடத்தில் வைத்து உடலை தகனம் செய்தனர்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவரை கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…