உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் – பீட்டர் அல்போன்ஸ்
உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், அனைத்து ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியென்றும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளின் வினாத்தாள்களும் இந்தியிலேயே இருக்கும் என்ற உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என எச்சரித்துள்ளார்.
சில மாநிலங்களின் தேர்தல் வெற்றிகளுக்காக , விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எடுக்கப்படும் இந்த முடிவினை திரும்பப்பெற வேண்டும். அதற்காக இந்திபேசாத மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டுகிறேன்.(4)
— S.Peter Alphonse (@PeterAlphonse7) October 14, 2022