சென்னை பாஜக அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா.! நிவாகிகளுடன் முக்கிய ஆலோசனை.!
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவை முடித்து விட்டு, தற்போது தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
இன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.
காலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவை முடித்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தென் தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய மாவட்ட நிர்வாகிகள் என 84 பேர் கலந்துகொண்டுள்ளனர்.