நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர், ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் தங்குவதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 24ம் தேதி ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருவதையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான ஆலோசனையும் மாநில அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. மேலும், அங்கு ரூ.70 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நாளை சென்னை வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024