தமிழகத்திற்கு வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு தமிழகம் வந்தடைந்தார்.
துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த ஆவணப்படுத்தும் வகையில் “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.இதை ஏற்பாடு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆவார்
இந்த புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.மேலும் தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பின் தமிழகத்திற்கு வந்துள்ளார்.மேலும் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அமித் ஷா முதல்முறையாக தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.