ஓமைக்ரான் பாதித்தவர்களுக்கு வீட்டிலேயே தனிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல்.

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்காக சென்னையில் வேப்பேரியில் சித்தமருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு, அறிகுறி இல்லாமலிருந்தால் வீட்டில் மருத்துவர்கள் அறிவுரையுடன் சிகிச்சை பெறலாம் என்றார். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை Virtual Monitor முறையில் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் தரவுகள் உள்ளன. அம்மா மினி கிளினிக் மூலம் பயனடைந்தவர்கள் பட்டியலை தர முடியுமா? தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம் மினி கிளினிக் திட்டம் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்