மின்தடை நாளை முதல்”இருளில் முழ்கும் தமிழகம்”..வெளியான அதிர்ச்சி தகவல்..!!
நாளை முதல் மின்தடையால் தமிழகம் இருளில் முழ்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின்சார வாரியம் அனல் மின் நிலையங்களில் 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு வைத்துள்ளது.இதனால் நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் மின்சார வாரியத்திற்கு உருவாகியுள்ளது.
ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்படும்.ஆனால் அதில், 2,500 மெகா வாட் வரை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், மின் வாரியத்தால், மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நெருக்கடி அதிகம் இருந்த, 8, 9, 10ம் தேதிகளில், கிராம பகுதிகளில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை, மின் தடை சத்தமில்லாமல் செய்யப்பட்டது. இதை அறிந்த எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதனால், நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள, 600 மெகா வாட் அலகில் 11ம் தேதி முதல்,மீண்டும், மின் உற்பத்தி துவங்கப்பட்டது.
இதையடுத்து, மின் தடை நேரம், ஒரு மணி முதல், இரண்டு மணி வரை என, குறைக்கப்பட்டது. இந்நிலையில், ‘மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது; அனல் மின் நிலையங்களில், தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய, தினமும், 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் தற்போது தமிழகம் உள்ளது.
அதை, உடனே வழங்கவிட்டால்அனல் மின் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்’ என, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி, அவசர கடிதம் எழுதினார். இந்நிலையில் நேற்று நிலவரப்படிஅனல் மின் நிலையங்களில் 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளதால். அதை பயன்படுத்தி, நாளை வரை மின் உற்பத்தி செய்யலாம். இந்நிலையில் ஒடிசாவில் உள்ள பரதீப் துறைமுகத்தில் இருந்து,நிலக்கரி வருவதிலும்தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், “நாளை முதல், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது”. மின் உற்பத்தி பாதித்தால், மின் தடை செய்வதை தவிர வேறு வழியில்லாத சூழ்நிலையில் மின்சார வாரியம் உள்ளதால் மீண்டும் 2014 செல்லும் தமிழ்நாடு மின்தடையால் இருளில் நாளை முதல் முழ்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU