வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,இது புதுச்சேரிக்கு மிக அருகில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அலெர்ட் :
இந்நிலையில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை :
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில்,தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…