#Breaking:லீவு விட்டாச்சு…இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?-இங்கே பார்க்கவும்!

தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கும்,நான்கு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி,
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை:
மேலும்,தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025