புதுச்சேரியில் 5-ஆம் வகுப்பு வரை நாளை முதல் விடுமுறை
புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகம் மட்டும் அல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.