கோவை, நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவையில் கனமழை பெய்து வருவதால், சாலைகள், தெருக்களில் வெல்ல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோவை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரியில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த 4 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று 5-வது நாளாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.