தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வரும் 5-ம் தேதி ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள்… சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!
இதனால், மழை மற்றும் புயல் எச்சரிக்கையால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுப்பக்கம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் வருகிறது. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…