Live: எங்கெல்லாம் மழை… இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

இன்றைய வானிலை நிலவரம், பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட மழை தொடர்பான முழு விவரத்தையும் உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

live tamil news

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம், திருச்சி, தேனி, சிவகங்கை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 of 1
பால முருகன்

பிரதீப் ஜான் சொன்ன தகவல்

  • நெல்லை பாபநாசம் (41% நிரம்பியது), மணிமுத்தாறு அணை (56% நிரம்பியது) ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக வதந்தி பரவி வருவதால் தூத்துக்குடி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அவை உண்மையல்ல, அணை நிரம்புவதற்கு அதிக மழை தேவை.
  • பால முருகன்

    பிரதீப் ஜான் சொன்ன தகவல்!

  • நெல்லை பாபநாசம் (41% நிரம்பியது), மணிமுத்தாறு அணை (56% நிரம்பியது) ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக வதந்தி பரவி வருவதால் தூத்துக்குடி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அவை உண்மையல்ல, அணை நிரம்புவதற்கு அதிக மழை தேவை.
  • மணிகண்டன்

    பூண்டி ஏரி நீர் திறப்பு : 

  • பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்ட உபரிநீரின் அளவானது 16,500 கன அடி நீர் என்ற அளவில் இருந்து மாலை 4 மணி அளவில், வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    இந்த மாவட்டங்களில் கனமழை அலர்ட்!

  • தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது .
  • மணிகண்டன்

    தூத்துக்குடி விமான சேவை :

  • கனமழை வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானம், தூத்துகுடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று செல்லவில்லை.
  • கெளதம்

    6,000 கன அடி நீர் வெளியேற்றம்:

  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நண்பகல் 12 மணி முதல் 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • மணிகண்டன்

    பேருத்து மீட்பு :

  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிளியாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பேருந்தை 30 மணி நேரத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டுள்ளனர்.
  • கெளதம்

    கோவையில் போக்குவரத்து பாதிப்பு:

  • கோவையில் பெய்த மழையால் முத்தூர் மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    திருச்செந்தூர் செல்ல வேண்டாம் 

  • இன்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். 
  • கெளதம்

    உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:

  • அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கெளதம்

    தூத்துக்குடியில் பயங்கர மழை:

  • தூத்துக்குடியில் இரவில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பலரது வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து நிற்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    முக்கொம்பு மேலணை நீர் திறப்பு:

  • முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்:

  • தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளாலங்கோட்டைக்கு கிழக்கே தாம்போதி பாலத்தில் சென்ற பொலிரோ கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்