நீலகிரியில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நீலகிரியில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றும் நீலகிரியில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் தொடர்ந்து 4-வது நாளாக அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.