LKG , UKG மாணவர்களுக்கு விடுமுறைதான்.! நாளை முறையான அறிவிப்பு வரும்-முதலமைச்சர்.!

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான். நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.நேற்று கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து காலை தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024