#Breaking: பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.. தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்பொழுது கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளை ரத்து செய்தும், வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நரைபெறும் என்று தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.