#BREAKING: கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை
மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,
- மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
- அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
- பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.