குஷியோ குஷி…1-9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை? – முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
1-9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.மேலும்,கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர்,”நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால்,ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விடுமுறை அளிக்க முடிவு எடுத்திருப்பதாக” அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்கள் அக்னி வெயில் கொளுத்த போகிறது.இந்நிலையில்,1-9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளர்கள்.
இதனிடையே,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.