பள்ளி, கல்லூரி விடுமுறை அப்டேட் : விழுப்புரம், கடலூர்…
விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது.
மழைநீர் வடியாத காரணத்தால் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நேற்றைய தினமே அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில், கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 4) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.