#BREAKING: நாளை 6 மாவட்டங்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

நாளை 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று 18 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாளை தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நெல்லை, அரியலூர் மற்றும் நாகை மாவட்டத்திலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.