தொடர் கனமழை… நெல்லையில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, 17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஆகும். நாகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.