தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13, 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

RATION SHOP

தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் வழங்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் 10ம் தேதி (நாளை) வேலை நாட்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், தீபாவளிக்கு அடுத்தநாள் (நவம்பர் 13ஆம் தேதி) திங்கட்கிழமை மற்றும் நவம்பர் 25 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி சாத்தானுக்கு இனியும் இளைஞர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது – அன்புமணி ராமதாஸ்

இதற்கிடையில், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் உள்ள இருப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்