Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு ..

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறையும் , கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறையும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.