விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு 5-வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.