கடலூர் மாவட்டத்தில் நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் - கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.30) விடுமுறை
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி உள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது.
புயல் கரையை கடப்பதன் காரணமாக நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, இதில் ஏற்கனவே , கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக நாளையும் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை(நவ.30) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.